×

நவ. 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

பெரம்பலூர், அக். 30: பெரம்பலூர் கலெக்டர் (பொ) ராஜேந்திரனிடம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அருளானந்தம் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கறிக்கோழி வளர்ப்புத்தொகை, குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 வழங்க வேண்டும். நபார்டு மானியம் பெரம்பலூர் மாவட்டத்தில் 112 பேர்களுக்கு வரவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும். பாரபட்சமின்றி அனைத்து பண்ணைகளுக்கும் கோழிக்குஞ்சுகள் இறக்க வேண்டும். மாதம் ஒருமுறை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். நிரந்தர ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். இந்த மனு மீது தீர்வு காணாவிட்டால் நவம்பர் 5ம் தேதி முதல் கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் அழகேசன் உடனிருந்தனர்.

Tags : strike action ,
× RELATED போராட்ட கால ஒழுங்கு, குற்ற நடவடிக்கை...