×

தோகைமலை பகுதியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட பணி

தோகைமலை, அக். 30: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுகள் உத்தரவாத காலத்துடன் நடைபெற்று வரும் இந்த சாலைபணிகளை மாநில தரக்கட்டுப்பாட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் முசிறி- குளித்தலை, சேதுபாவாசத்திரம் ரோடு அக்காண்டிமேடு முதல் போஜாநாயக்கன்பட்டி வரை நடைபெற்று வரும் சாலை பணிகள், ஆலத்தூர் முதல் ஆர்ச்சம்பட்டி வரை நடைபெற்று வரும் சாலை பணிகள், டி.மேலப்பட்டி காமராஜ் நகர் முதல் நங்கவரம் ரோடு நெய்தலூர் வரை நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் குன்னாக்கவுண்டன்பட்டி முதல் பேரூர் வரை நடைபெற்றும் சாலை பணிகள், வேங்கடத்தாம்பட்டி முதல் கள்ளை ரோடு வரை நடைபெற்று வரும் சாலைபணிகளை மாநில தரக்கட்டுப்பாட்டு அலுவலர் (எஸ்கியூஎம்)இளங்கோவன் தலைமையில் மாநில குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் பாலங்கள், சாலைகளின் தன்மைகள், நீளம், சாலையின் அகலம், மண்ணின் அளவு என புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் பல்வேறு தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி துறையின் உதவி செயற் பொறியாளர் தமிழன்பன், உதவி பொறியாளர்கள் செல்வி, சமீம்அன்சாரி, மைதிலி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ரெங்கரத்தினம், சரவணமுத்து, சாலை ஆய்வாளர் விஜயராணி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா