கல்லூரி விடுதியில் மின் விசிறி திருடிய 2 ஊழியர்கள் கைது

ஆட்டையாம்பட்டி, அக்.30: சேலம் அருகே கல்லூரி விடுதியில் மின்விசிறி திருடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி பகுதியில் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் விடுதி இயங்கி வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதமாக கல்லூரி திறக்கப்படவில்லை. இந்நிலையில், கல்லூரி விடுதிக்குள் புகுந்த ஆசாமிகள் 16 மின் விசிறிகளை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், அங்கு பிளம்பராக பணியாற்றி வரும் தாரமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனிசாமி(53), தண்ணீர் வண்டி டிரைவராக பணியாற்றி வரும் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த முத்து மகன் பழனிசாமி(64) ஆகியோர் மது குடிக்க பணம் இல்லாததால் மின் விசிறிகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>