×

தர்மபுரியில் பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்

தர்மபுரி, அக். 30: தர்மபுரி திமுக மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்ரமணி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கட்சியின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும், தர்மபுரி மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏவும், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ இன்பசேகரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து இவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதை, கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் நேற்று கொண்டாடினர்.பென்னாகரம்: பென்னாகரம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், பென்னாகரம் நகர செயலாளர் வீரமணி, பொறுப்புக்குழு உறுப்பினர் காளியப்பன், பொருளாளர் மடம் முருகேசன், கமலேசன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காரிமங்கலம்: காரிமங்கலம்  ராமசாமி கோயில் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்  அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், காஞ்சனா கண்ணபெருமாள்,  முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பெரியண்ணன், கொட்டாவூர் கணேசன், தொண்டரணி  கிருஷ்ணன், வசந்த், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri ,
× RELATED பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு