×

தர்மபுரியில் போனஸ் கேட்டு மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.30: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக்கோரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஜயன், சீனிவாசன், சுந்தரமூர்த்தி, ஜெகநாதன், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், பணி பலன்களை செயல்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : union protests ,Dharmapuri ,
× RELATED பூட்டி கிடக்கும் பெட்ரோல் நிலையம்...