×

போதை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

பாலக்காடு, அக்.30:  பாலக்காடு நகராட்சி 100 அடி சாலையில் போதை தடுப்புப்பிரிவு போலீசாரும், பாலக்காடு டவுன் வடக்கு போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரை போலீசார் தடுத்து  நிறுத்தி சோதனை செய்தபோது சட்ட விரோதமாக போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் பாலக்காடு அருகே கடுக்காம்குன்றை சேர்ந்த ரிஷின் (28) என்பதும் திருச்சூரிலிருந்து ஏஜென்டிடமிருந்து போதை பொருட்கள் வாங்கி வருவதாகவும், தனது வங்கி கணக்கில் பணம் செலுத்துபவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரிடமிருந்து போதைப்பொருள் 1.8 கிராம் பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED போக்சோவில் வாலிபர் கைது