×

அ.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு

ஊட்டி, அக். 30: ஊட்டி என்சிஎம்எஸ் பார்க்கிங் வளாகம் அருகே புதிதாக அ.தி.மு.க. அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. அர்சுணன், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, வார்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கொடியேற்று விழா நடந்தது.

இவ்விழாவில், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஊட்டி நகர செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் குமார், பெள்ளி, சக்சஸ் சந்திரன், வசந்தராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவக்குமார், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம், சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காந்திப்பேட்டை அருகே சுற்றுலா...