×

நீர் பனியில் இருந்து பாதுகாக்க காய்கறி பயிர்களுக்கு ஸ்பிரிங்லரில் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்

ஊட்டி, அக். 30: நீர் பனிப் பொழிவு அதிகரித்துள்ள நிலையில், மலை காய்கறிகள் பாதிக்காமல் இருக்க தற்போது ஸ்பிரிங்லர் மூலம் அதிகாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் தற்போது நீர் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் புல்வெளிகள், மலை காய்கறிகள், தேயிலை செடிகளும் பாதித்து வருகிறது. மாறுபட்ட காலநிலை நிலவுவதால், மலை காய்கறிகள் மற்றும் தேயிலை செடிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மலை காய்கறி செடிகள் நீர் பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூலும் பாதிக்க வாய்ப்புள்ளது.

இதனால் நீர் பனியில் இருந்து மலை காய்கறிகளை காக்கும் பொருட்டு தற்போது அனைத்து பகுதிகளிலும் காலை நேரங்களில் பயிர்களுக்கு  தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலானோர் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி நீர் பனியில் இருந்து பயிர்களை காத்து வருகின்றனர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு