×

காந்திய மக்கள் யாத்திரை

கோவை, அக். 30: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், காந்தியின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘‘காந்திய மக்கள் யாத்திரை’’ என்னும் பாதயாத்திரை கடந்த 18-ந் தேதி துவக்கப்பட்டது. அதன்படி, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டுகளிலும் தினமும் யாத்திரை நடைபெற்று வருகிறது. காந்தியின் சிந்தனைகள், சொற்பொழிவுகள் போன்றவை இந்த யாத்திரையின்போது வெளிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பகுளம் மைதானத்தில் நேற்று மாலை இந்த யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய் தத் இந்த யாத்திரையை துவக்கி வைத்தார்.

தேசிய உணர்வூட்டும் நாட்டுப்பற்று பாடல்களை பாடி காந்திய சிந்தனைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மகாத்மா காந்தி போன்று வேஷமிட்ட தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். யாத்திரையில், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, மாநில பொதுச்செயலாளர் வீனஸ்மணி, திருப்பூர் முன்னாள் துணை மேயர் செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல், கணபதி சிவக்குமார், வக்கீல் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் சவுந்தரகுமார், குருசாமி, கிருஷ்ணமூர்த்தி, கோவை போஸ், காயத்ரி, காந்தகுமார், மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Pilgrimage ,Gandhian People ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு