குடிசை வீட்டில் தீ விபத்து

ஈரோடு, அக்.30: ஈரோட்டில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.ஈரோடு சென்னிமலை ரோடு அரசு ஐடிஐ அருகே உள்ள கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த மனோகரன் மகன் பிரித்தாம் (22). இவர், பெருந்துறையில் உள்ள தனியார் டீ கப் தயாரிக்கும் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை மனோகரன், கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. மனோகரன் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பிரித்தாம் மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரித்தாம், வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலை பிரித்தாமின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த ரோந்து சென்ற போலீசார், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 30 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து, வீட்டிற்குள் இருந்த டிவி, கட்டில், உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா?, அல்லது மர்ம நபர்கள் குடிசைக்கு தீ வைத்து சென்றார்களா? என ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>