×

கொரோனா பரிசோதனை முடிவை கண்டறிய அரசு மருத்துவமனையில் புதிய கருவி

ஈரோடு, அக்.30: ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவை விரைவாக கண்டறிய புதிய கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் கூறியதாவது:பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகாரத்துடன் கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் கொரோனா (ஆர்.டி.-பி.சி.ஆர்.) பரிசோதனைக்கூடம் செயல்பட்டு வருகிறது.  

இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 562 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இந்த பரிசோதனைக்கூடத்தில் உள்ள கருவியில் பரிசோதனை செய்ய 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை கால அவகாசம் தேவைப்பட்டது.  தற்போது தமிழக அரசு இந்த பரிசோதனைக்கூடத்துக்கு சிறிய அளவிலான கையடக்க பரிசோதனை கருவியை வழங்கி உள்ளது. இந்த கருவி தானியங்கி பிரித்தெடுத்தல் முயில், 20 நிமிடங்களில் 32 சளி மாதிரியில் இருந்து நியூக்ளிக் அமிலங்களை பிரித்து எடுக்கிறது. இதன்மூலம் கொரோனா பரிசோதனை முடிவை விரைவாக கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : government hospital ,
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு