கோபியில் தங்கமயில் ஜூவல்லரி புதிய முகவரிக்கு இடமாற்றம்

ஈரோடு, அக்.30:  கோபியில் தங்கமயில் புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தங்கமயில் நிறுவனம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 47 கிளைகளை நிறுவி தனது வாடிக்கையாளர் சேவையை வெற்றிகரமாக செய்து வருகிறது.2013ம் ஆண்டு கோபிச்செட்டிப்பாளையம் சக்தி மெயின் ரோட்டில் ஆரம்பிக்கப்பட்ட தங்கமயில் நிறுவனம் வாடிக்கையளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதுபொலிவுடன் விரிவுபடுத்தப்பட்ட புதிய கிளை கச்சேரி தெரு பயணியர் மாளிகை எதிரில் நேற்று முதல் புதிய முகவரியில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையளர்களுக்காக மிக குறைந்த சேதாரம் வழங்கப்படுகிறது. வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பத்திரங்களுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை.  புதிய முகவரியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி நிறுவனத்தை கோபிச்செட்டிப்பாளையம் தொழிலதிபர் ராஜேந்திர குலோத்துங்கன் திறந்து வைத்தார்.

 இதில், தங்கமயில் ஜூவல்லரி நிறுவனத்தின் விற்பனை தலைவர் சரவன்ராஜ், தங்கமயில் கோபிசெட்டிபாளையம் கிளை மேலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>