×

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்ேகற்ற சுவாமி விக்ரகங்கள் குமரி திரும்பின

களியக்காவிளை, அக்.30:திருவனந்தபுரம் நவராத்திரி  விழாவுக்காக கொண்டு செல்லப்பட்ட குமரி சுவாமி விக்ரகங்கள் நேற்று காலை குமரி மாவட்டம் களியக்காவிளையை வந்து சேர்ந்தது.திருவனந்தபுரம்  அரண்மனையில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க ஆண்டுதோறும் குமரி  மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் செல்வது வழக்கம். அதன்படி இந்த  ஆண்டு கடந்த 14ம் தேதி காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுசீந்திரம்  முன்னுதித்த நங்கை அம்மன்,  பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன்,  வேளிமலை முருகன் சுவாமி   ஆகிய சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டு சென்றன.இந்த நிலையில் நவராத்திரி விழா கடந்த  17ம் தேதி தொடங்கி அரண்மனையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து  சுவாமி விக்ரகங்கள் நவராத்திரி பூஜை முடிந்து நேற்று முன்தினம் மாலை குமரி மாவட்டம்  புறப்பட்டது. நேற்று காலை  சாமி விக்ரகங்கள் களியக்காவிளை வந்து சேர்ந்தது. தொடர்ந்து கேரள அதிகாரிகள்  சாமி விக்ரகங்களை  குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை  ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து திருத்துவபுரம், குழித்துறை  வழியாக இன்று மதியம் சுவாமி விக்ரகங்கள் பத்மநாபபுரத்தை வந்தடைகிறது.Tags : idols ,Swami ,festival ,Kumari ,Navratri ,Thiruvananthapuram ,
× RELATED கும்பகோணம் அருகே கோயிலில் நவக்கிரக சிலைகள் உடைப்பு: 2 பேர் கைது