×

சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

விழுப்புரம், அக்.30:  விழுப்புரம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரி டிராக்டர் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 புதுச்சேரி மணவெளி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (37). டிராக்டர் ஓட்டுனராக முட்ராம்பட்டு பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். கண்டமங்கலம் பொரங்கி பாலப்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் அதே சூளையில் வேலை செய்து வருகிறார். இவரது 12 வயது மகள் பெற்றோருக்கு உதவியாக சூளையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரகாஷ் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் கல்யாணியிடம் 12 வயது சிறுமியின் பெற்றோர் இதைப்பற்றி கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கல்யாணி விழுப்புரம் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி விரைந்து நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மகளிர் காவல் நிலைய போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags :
× RELATED விபத்தில் சிறுமி பலி லாரி டிரைவர் கைது