நீட் தேர்வில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்

நெல்லை, அக். 30:  நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என்று, காங்கிரஸ் பிரமுகர் நாங்குநேரி ரூபி மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசின் தவறான அணுகுமுறையால், கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு தகர்த்தெறியப்பட்டுள்ளது. பல ஆயிரம் பணம் செலவு செய்து சிறப்புப் பயிற்சி எடுத்தால் மட்டுமே, நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கும் வகையில், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் மசோதாவுக்கு,  கவர்னர் உடனே அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது வருந்தத்தக்கது.

இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன் என்ற, வருத்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜ அரசு, நம் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதிலேயே உறுதியாக இருக்கிறது.  மத்திய பாஜ அரசின் இந்தப் போக்கு தொடர்ந்தால், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ரூபி மனோகரன் கூறியுள்ளார்.

Related Stories: