×

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி, அக். 30:  இன்று கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தூத்துக்குடியில் 113வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை வகித்த எஸ்பி ஜெயக்குமார் பல்வேறு அறிவுரைகள் வழங்கிப் பேசினார். ஏடிஎஸ்பிகள் கோபி, செல்வன், 10 டிஎஸ்பிகள், 44 இன்ஸ்பெக்டர்கள், 123  உதவி ஆய்வாளர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையோரங்களில் 15  சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல் அனைத்து உட்கோட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. இது தவிர ‘டெல்டா’ என்னும் 6  அதிரடிப்படையினர் மற்றும் ‘ஆல்பா’ என்னும் 8 அதிரடிப்படையினர் அடங்கிய  காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது, 149 முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு  தனியாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை ரோந்து மற்றும் அந்தந்த காவல்  நிலைய நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் இரு சக்கர வாகன ரோந்துகள் தவிர  கூடுதலாக 26 நான்கு சக்கர வாகன சாலை ரோந்தும், 9 இரு சக்கர வாகன சாலை  ரோந்து பணியும் நடந்து வருவதாக எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டத்தில் ஏடிஎஸ்பிகள் கோபி, செல்வன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், டிஎஸ்பிகள்   பொன்னரசு, வெங்கடேசன்,  சங்கர், கலைகதிரவன், இளங்கோவன், பெலிக்ஸ் சுரேஷ்  பீட்டர், காட்வின் ஜெகதீஷ், நெல்லை மாவட்டம்  பிரகாஷ், கன்னியாகுமரி  டிஎஸ்பி பார்த்திபன், தூத்துக்குடி ஆயதப்படை இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன்  உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


Tags : police personnel ,Thoothukudi district ,
× RELATED முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம்...