×

போளூர் அருகே ஏரியில் மூழ்கி இறந்த நேபாள சிறுமிகள் குடும்பத்துக்கு நிவாரணம் கிராம மக்கள் வழங்கினர்

போளூர், அக்.30: போளூர் அடுத்த பெரியகரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி இறந்த நேபாள சிறுமிகளின் குடும்பத்திற்கு கிராம மக்கள் நிவாரண உதவி வழங்கினர்.
நேபாளத்தை சேர்ந்த தீபக்சிங் என்பவர், போளூர் அடுத்த பெரியகரம் கிராமத்தில் இரவு காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம், இவரது 2 மகள்கள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் சிறுமிகளின் சடலங்களை நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுமிகளின் சடலங்களை கிராம மக்களே நல்லடக்கம் செய்தனர். மேலும், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆ.மிசியம்மாள் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் சி.பெரியசாமி, துணைத்தலைவர் அ.அண்ணாமலை மற்றும் கிராம மக்கள் ₹44 ஆயிரத்து 339ஐ வசூலித்து, ஏழ்மை நிலையில் உள்ள தீபக்சிங் குடும்பத்துக்கு வழங்கினர். மேலும், 7 அரிசி மூட்டைகள், காய்கறிகள், மளிகை போன்ற நிவாரண பொருட்களும் கிராம மக்களால் வழங்கப்பட்டது.இதுதவிர, ஏரியில் குடிசை வீட்டில் வசிக்கும் தீபக் சிங்கிற்கு, வேறு இடத்தில் குடியிருப்பு வசதி செய்து தரவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : lake ,Nepali ,Polur ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...