×

செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கின

புழல்: செங்குன்றம் வள்ளலார் தெருவில்  சார்பதிவாளர்  அலுவலகம் உள்ளது.  இணை சார்பதிவாளர் தனசேகரன், இணை பதிவாளராக பிரகாசம்  உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புழல்,  செங்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் பத்திரப்பதிவு உள்ளிட்ட  பல்வேறு பணிகளுக்கு இங்குதான் வருவார்கள்.   இதில் அலுவலக நேரத்தை தவிர்த்து இரவு  நேரங்களிலும் பத்திரப் பதிவுகள் அத்துமீறி நடப்பதாகவும்  லஞ்சம்  பெற்றுக்கொண்டு அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும் சென்னையில்  உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்  அடிப்படையில் நேற்று மாலை 5.30மணி அளவில் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு  டிஎஸ்பி லவக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மாடியில் உள்ள  பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு  பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் அதிரடியாக சோதனை மற்றும்  விசாரணை நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென வந்ததை ஒட்டி அலுவலகத்தில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட புரோக்கர் அலுவலங்கள் அதிரடியாக  மூடப்பட்டு புரோக்கர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.  முன்னதாக இவர்கள் வருவதை  கண்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் அவர்களது கார் டிரைவர் மற்றும் உதவியாளர்,  புரோக்கர்களிடம் லஞ்சப்பணத்தை கொடுத்து அனுப்பி விட்டதாக தெரிகிறது.  அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் வேளையில் பத்திரப்பதிவு செய்ய வரும்  பொதுமக்களிடம் ஊழியர்கள் இரவு நேரத்திலும் கையெழுத்து பெற்று வருகின்றனர்.  இதில் முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கியதாக தெரிகிறது.  இதனால் இந்த பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.      

Tags : Red Cross ,
× RELATED கொடைக்கானல் குண்டுபட்டி பள்ளியில் நுழைவு வாயில் திறப்பு