×

சீரமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மேனுவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், உயரமாக உள்ள பாதாள சாக்கடை மேனுவலால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக, தினகரன் நாளிதழில் படத்துடன், செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி அதிகாரிகள், அதனை சீரமைத்தனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தபால் அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், மின்வாரிய அலுவலகம், எல்ஐசி அலுவலகம், ராஜாஜி மார்க்கெட் என முக்கிய அலுவலகங்கள் உள்ளன. அனைத்து தரப்பு மக்களும் அடிக்கடி வந்து செல்லும் இந்த சாலையில், பாதாள சாக்கடை மேனுவல் மூடி, சாலையைவிட சுமார் ஒன்றரை அடி உயரத்தில் உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் பைக்கில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர் என தினகரன் நாளிதழில், கடந்த அக்.25ம் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, அப்பகுதியில் நேற்று ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள், உயரமாக இருந்த பாதாள சாக்கடை மேனுவல் மூடிகளை உடனடியாக அகற்றி சீரமைத்தனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
× RELATED சீரமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மேனுவல்