நெட்டூரில் நல்லுறவு நிகழ்ச்சி கிராம பெரியவர்கள் அனுபவங்களை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்

ஆலங்குளம், அக். 29:  கிராம பெரியவர்கள் தங்களது அனுபவங்களை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டுமென நெட்டூரில் நடந்த நல்லுறவு நிகழ்ச்சியில் எஸ்பி சுகுணாசிங் பேசினார். ஆலங்குளம் அருகே நெட்டூரில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். எஸ்ஐ பாரத் லிங்கம் வரவேற்றார். டிஎஸ்பி பொன்னி வளவன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்பி சுகுணா சிங் கலந்து கொண்டு பேசுகையில், காவல்துறை உங்கள் நண்பன். இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள்  உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். அதற்கு இங்குள்ள பெரியவர்கள் தங்களது அனுபவங்களை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.

தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த சூரியா, மதியழகன், பிரேமா, 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த அருண் கார்த்திகா, இசைவேணி, இளங்கோ ஆகியோரை பாராட்டி சுகுணா சிங் பரிசு வழங்கினார். கிராம மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகக்கவசம். விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. 100 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை எஸ்ஐ பாரத் லிங்கம் நடத்தினார். முன்னதாக நெட்டூர் கிராம மக்களின் கலைநிகழ்ச்சி, தாலாட்டு பாடல், ஓராட்டு பாட்டு. தெம்மாங்கு, நாட்டுப்புற பாடல், கும்மிப்பாட்டு, கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் நெட்டூர் ஊர் பெரியவர்கள் நாட்டாமை துரை, சன்னியாசி, கோபால கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருஞானம், எஸ்ஐ பேச்சிமுத்து, எஸ்எஸ்ஐ சுப்பிரமணியன், பயிற்சி எஸ்ஐ பரமசிவன், சமூக ஆர்வலர்கள் நயினா முகமது, மதன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதியோர்கள் 100 பேருக்கு சேலை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Related Stories: