×

திருச்சியில் சிமென்ட் மூட்டை போல் மணல் கடத்தியவர் கைது

திருச்சி, அக். 29: திருச்சி-ரங்கம் மாம்பழச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். அதில் 20 சிமென்ட் மூட்டைகள் இருந்தது. ஆனால் சோதனை செய்தபோது, சிமென்ட் மூட்டை போல் இருந்த அந்த மூட்டைகளில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணல் மூட்டைகள் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த ரங்கம் போலீஸ் எஸ்ஐ கோபி, டிரைவர் வடக்கு தாராநல்லூரை சேர்ந்த நாகராஜ்(30) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் லோடு ஆட்டோ உரிமையாளரை தேடி வருகிறார்.

Tags : Sand smuggler ,Trichy ,
× RELATED திருச்சியில் பெய்த கனமழையால்...