×

ஏழை எளியோருக்கு ரூ.7,500 கொரோனா நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், அக்.29: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.7,500 நிவாரணம் மற்றும் அரிசி, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடையில் இலவசமாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கம்மிட்டி நிர்வாகி ரவிக்குமார் தலைமை வைத்தார். திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொபோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.7ஆயிரத்து500 நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் பாமாயில், மாவு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும். பருவமழை தொடங்க உள்ளதால் வைரஸ் காய்ச்சல் மற்றும் மர்ம நோய்கள் பொதுமக்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மழைநீர் வடிகால் சாக்கடைகளை தூர்வார வேண்டும். அனைத்து பகுதிகளிலும் வாரம் தோறும் கொசு மருந்து அடிக்க வேண்டும். உள்ளிட்டகோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Marxist ,poor ,
× RELATED ேவலைநிறுத்தத்தை விளக்கி கம்பம், போடியில் ஆர்ப்பாட்டம்