×

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள செயல்விளக்க பயிற்சி

திருத்துறைப்பூண்டி, அக்.29: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பாலம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இயற்கை பேரிடரை எதிர்கொள்ளுதல் குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள செக்கடிக்குளக்கரையில் நடைபெற்றது. இயற்கை பேரிடர் பயிற்சியாளர் செந்தில்குமார் சிறுவர்களுக்கு பயிற்சியளித்தார், அப்போது பேரிடர் எனபது எப்போது வேண்டுமானாலும் வரலாம். வெள்ளம், புயல், தீ, பூகம்பம் போன்றவை ஏற்படும்போது பதற்றத்தை குறைத்து நிதானமாக செயல்பட்டு உயிர் உடைமைகளை பாதுகாக்க வெண்டும். கிடைக்கும் பொருட்களைக்கொண்டு உயிர் பிழைக்க முயற்சிக்க வேண்டும். சிறுவர்களுக்கு பேரிடரில் இருந்து தப்பிப்பது குறித்த புரிதலும், பயிற்சியும் மிக அவசியம். எனவே வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இயற்கை சீற்றங்களை அனைவரும் எதிர்க்கொள்ள ரெடியாக வேண்டும் என்றார்.

Tags : disaster ,
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...