×

அவிநாசியில் ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, அக். 29: அவிநாசியில் ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்திற்கு நேற்று பருத்தி ஏலம் போனது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர பருத்தி ஏலத்தில் ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.  மொத்தம் 938 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500 முதல் ரூ.5550 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1800 முதல் ரூ.2500 வரையிலும் ஏலம் போனது. ஏலத்தில், ஆத்தூர், மேட்டூர், கோபி, நம்பியூர், மலையப்பாளையம், சத்தியமங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி, அவிநாசி,  புளியம்பட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 149 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  24 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். ஆர்.சி.எச்.பி.டி. ரகப்பருத்தி குவிண்டாலுக்கு ரூ.300 வரை விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த தகவலை அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் சரவணக்குமார் தெரிவித்தார்.

Tags : Avinashi ,
× RELATED கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு