×

மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர்கள் கூட்டம்

ஊட்டி, அக். 29: நீலகிரி மாவட்ட தி.மு.க. விவசாய அணி, வர்த்தகர் அணி, பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கர்ணன் வரவேற்றார். கூட்டத்தில், எல்லோரும் நம்முடன் இணைய வழி உறுப்பினர் சேர்ப்பு பணியினை அணிகளின் சார்பில் பொறுப்பேற்று தீவிரபடுத்துவது எனவும், மாவட்டத்திலுள்ள அனைத்து நகர, ஒன்றிய பகுதிகளிலும் உள்ள விவசாய அணி, வர்த்தகர் அணி, பொறியாளர் அணி ஆகிய அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை ஒன்றிணைத்து இணைய வழியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தேவராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மல்லிகொரை மூர்த்தி, மெல்ரோஸ் செல்வராஜ், ஆல்துரை, ஆட்டோ ராஜன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் நமசிவாயம், தவமணி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் தேவராஜ், பிரதீஷ் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags : District DMK Agricultural Team Organizers Meeting ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்