×

வெளியூர் வியாபாரிகளுக்கு ரூ.22க்கு இளநீர் கொள்முதல்

பொள்ளாச்சி, அக்.29: பொள்ளாச்சியில் உள்ள பல  தோட்டங்களில், வெளியூர் வியாபாரிகள் ரூ.22க்கு இளநீர் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக இளநீர் அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மழை இல்லாததால், அந்த நேரத்தில்  இளநீர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த மாதம் துவக்கத்தில் இருந்து சுற்று வட்டார கிராமங்களில் இளநீர் அறுவடை பணி அதிகமாக நடந்து வருகிறது. இளநீர் உற்பத்தி அதிகரிப்பாலும், அவை வெளியிடங்களுக்கு அதிகளவு ஏற்றுமதியாவதாலும் கடந்தாண்டை கணக்கிடும்போது இந்தாண்டில் இளநீர் விலை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தோட்டங்களில் நேரடி கொள்முதல் விலையாக ரூ.23 முதல் ரூ.25 வரை இருந்தது. இந்தாண்டில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், குட்டை மற்றும் நெட்டை வீரிய ரக இளநீரானது, பண்ணையில் அதிகபட்சமாக ரூ.22க்கே விலை போகிறது. பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் இளநீர் விலை குறைவால், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து ஆர்டர் மூலம் கொள்முதல் செல்வதை தொடர்ந்துள்ளனர். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தால், இளநீரின் தேவை மேலும் அதிகரிப்பதுடன், அதன் விலையும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...