×

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்


கோவை, அக். 29: கோவை நஞ்சப்பா சாலையில் சிறுவாணி குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால்  அவிநாசி மேம்பாலம் கீழ் பகுதி சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாநகரில் உள்ள 26 வார்டுகளுக்கு சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பிரதான குழாயில் இருந்து நகருக்குள் கொண்டு வரப்படும் சிறுவாணி குடிநீர், பல்வேறு கிளை குழாய்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே பதிக்கப்பட்டுள்ள சிறுவாணி குடிநீர்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால், குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அவினாசி மேம்பால கீழ் பகுதி சாலைகளில் தேங்கியது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டன.  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் சாலை மற்றும் அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் பம்ப் உதவியுடன் உறிஞ்சி அகற்றினர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குழாயைச் சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...