×

சாணார்பட்டி அருகே சாலை வசதி கோரி மறியல் போராட்டம்

கோபால்பட்டி, அக். 28: சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி பஞ்சாயத்தில் கோட்டைகாரன்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊருக்கு செல்ல போதிய சாலை வசதியில்லை. இந்நிலையில்  ஒத்தக்கடையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை  அகற்றி சாலை வசதி செய்து தரக்கோரி, கோட்டைகாரன்பட்டி கிராம பொதுமக்கள் சக்கிலியன்கொடையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்மந்தபட்டவர்களிடம் சாணார்பட்டி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : protest ,road facility ,Sanarpatti ,
× RELATED பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்...