×

பெரியார் சிலை அவமதிப்பு திமுக, திக கண்டன ஆர்ப்பாட்டம்

சின்னாளபட்டி, அக். 28: பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திமுக, திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பங்காருபுரம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று முன்தினம் இரவு சிலர் காவி சாயம் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, நேற்று மாலை 5 மணியளவில் ரெட்டியார்சத்திரம் பேருந்துநிலையம் அருகே ஒன்றிய திமுக மற்றம் திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ரெட்டியார்சத்திர ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி தலைமை வகித்தார். திக மண்டல தலைவர் நாகராஜன், மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசும் சர்ச்சையை உருவாக்க நினைப்பவர்களை கைது செய்யா விட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் துரைசம்பத், திண்டுக்கல் நகர செயலாளர் ஆனந்தகுமார், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் புதுப்பட்டி அருணாச்சலம், முருநெல்லிக்கோட்டை சின்னு, கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரெங்கசாமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றியக்குழு  உறுப்பினர் காளீஸ்வரி மலைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Periyar ,DMK ,Tika ,protest ,
× RELATED கனடாவில் உள்ள நூற்றாண்டு பழமை மிக்க...