×

வடமதுரை அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்

வேடசந்தூர், அக். 28: வடமதுரை அருகே திருமணத்திற்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயமடைந்தனர்.வடமதுரை அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடி அருகே பெரியகுளத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மணிகண்டன் (36), சுபாஷினி(13), சித்ராதேவிகா(46), இந்திரா, பூங்கொடி,ராஜேந்திரன் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்த அனைவரும் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் செர்ந்தவர்கள். திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Vadamadurai ,
× RELATED தீபாவளிக்கு சிறப்பு இயக்கம் 28,360 பஸ்களில் 13 லட்சம் பேர் பயணம்