×

இன்று ஆசிரியர்கள் போராட்டம்

சிவகங்கை, அக்.28:  பள்ளிகள் திறப்பு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை விளக்கி பேசினார். நிர்வாகிகள் புரட்சித்தம்பி, குமரேசன், ரவி, ஜெயக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மானகிரி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் கைத்தொழில் ஆசிரியையை பணி செய்ய விடாமல் தடுத்தும், தகாத வார்த்தைகளை பேசி தொடர்ந்து மிரட்டி வரும் தளக்காவூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மீதும், அவரது தூண்டுதலின் பேரில் பள்ளிக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்துள்ள கிராம ஊராட்சி நிர்வாகத்தின் மீதும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் பாதுகாப்பாக பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஆசிரியர்கள் நலன்களுக்கெதிராக தொடர்ந்து வெளியிடப்படும் அரசாணைகளை ரத்து செய்தல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(அக்.28) போராட்டம் நடைபெறும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Teachers ,
× RELATED ஸ்டிரைக்கில் ஆசிரியர்கள் பங்கேற்றால் ஆப்சென்ட் போடப்படும்