×

நேரு யுவகேந்திரா சார்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு தினம்

காரைக்குடி, அக்.28:  காரைக்குடியில் வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இளையோர் மன்ற துணைத்தலைவர் பரணி வரவேற்றார். வள்ளல் அழகப்பர் இளையோர் மன்ற நிறுவனர் முகமதுகனி தலைமை வகித்தார். அழகப்பா பல்கலைக்கழக என்எஸ்எஸ் அதிகாரி சிவக்குமார் துவக்கி வைத்து பேசினார்.
அக்னிச் சிறகுகள் மக்கள் நல சங்க நிறுவனர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார். லஞ்ச ஒழிப்பு குறித்து நசீர், மணிபாரதி ஆகியோர் விளக்கினர். மன்ற நிர்வாகிகள் நத்தர்அஷ்ரப், ராஜ்கப்பூர், அம்ஜத் உள்பட பலர் கலந்து கொண்டனர். லஞ்ச ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.  சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

Tags : Anti-Corruption Day ,
× RELATED ஊழல் எதிர்ப்பு தின உறுதிமொழி