×

இரவிபுதூர்கடை கூட்டுறவு வங்கி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்பாட்டம்

நாகர்கோவில், அக்.28: இரவிபுதூர்கடை கூட்டுறவு வங்கி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரவிபுதூர்கடை தொடக்க  வேளாண்மை கூட்டுறவு  வங்கியில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும்,  விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வங்கி உறுப்பினர் ராபர்ட் கிளைவ் தலைமையில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்லாசர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், திருவட்டார் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் கலைக்கிரி, டைசன், தங்கப்பன், சுமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ பேசினார்.

Tags : Demonstration ,Raviputhurkadai Co-operative Bank ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்