×

மாவட்டம் முழுவதும் 25 பேருக்கு கொரோனா

தர்மபுரி, அக்.28: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. காரிமங்கலத்தில் 40 வயது ஓட்டுநர், பாலக்கோடு எர்ரனஅள்ளியில் 24 வயது ஓட்டுநர், தர்மபுரி கொல்லப்பட்டியில் 22 வயது பெண், மகேந்திரமங்கலத்தில் 24 வயது இளைஞர், பாப்பாரப்பட்டியில் 44 வயது ஆண் உள்ளிட்ட 25 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 5515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 5052 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு திரும்பினர்.

Tags : Corona ,district ,
× RELATED மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கொரோனா