×

தீயணைப்பு துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, அக்.28: தர்மபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜா தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு  டூவீலர், சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. இப்பேரணியில் தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, செந்தில் நகர், இலக்கியம்பட்டி, தர்மபுரி 4ரோடு வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலையம் வந்தடைந்தது.

Tags : Corona Prevention Awareness Rally ,Fire Department ,
× RELATED தீயணைப்பு துறையினர் சார்பில்...