×

கால்கள் செயலிழந்த 59 பேருக்கு ₹14.75 லட்சத்தில் உபகரணங்கள்

கிருஷ்ணகிரி, அக்.28: தமிழ்நாடு  சுகாதாரத்துறை சார்பில், முதுகு தண்டுவட நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, இரு கால்களும் செயலிழந்து இருசக்கர நாற்காலியை பயன்படுத்தும் நபர்களுக்கு, 6  மாதத்திற்கு தேவையான 12 வகையான மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்கள்  வருடத்திற்கு இருமுறை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி 59  நபர்களுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் மொத்தம் ₹14 லட்சத்து 75 ஆயிரம்  மதிப்பிலான 12 வகையான மருந்து பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவன், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வாகனத்தில் உள்ள வேகக்கட்டுப்பாடு...