×

தேன்கனிக்கோட்டை அருகே 5 யானைகள் அட்டகாசம்; தக்காளி தோட்டம் நாசம்

தேன்கனிக்கோட்டை, அக்.28: தேன்கனிக்கோட்டை அருகே 5 யானைகள் அட்டகாசத்தால் ராகி, தக்காளி தோட்டம் நாசமடைந்தன. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில், 5 யானைகள் நேற்று முன்தினம் இரவு கேரட்டி கிராமத்தில் பைய்யப்பா என்பவரது விவசாய நிலங்களில் புகுந்து ராகி, தக்காளி தோட்டத்தை நாசம் செய்தன. பின்னர், மீண்டும் தாவரகரை காட்டிற்குள் சென்றது. நேற்று காலை விவசாயிகள் வயல்களில் சென்று பார்த்தபோது கதிர் பிடித்துள்ள ராகி பயிர்கள், தக்காளி தோட்டம் நாசமடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமடைந்த வயல்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : tomato garden ,Dhenkanikottai ,
× RELATED வால்பாறை அருகே வனத்துறை முகாமை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்