×

மாவட்டத்தில் ஒரு வாரமாக குறைந்த கொரோனா பாதிப்பு

நாமக்கல், அக்.28: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று  68 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, அரசு பஸ் டிரைவர், காவல்துறையில் பணியாற்றும் எஸ்ஐ உள்பட 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8,828 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 8,026 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 709 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக தான் இருக்கிறது. மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு, தொடர்ந்து காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை குறைவாக எடுக்கப்படுவதால், பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது என, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இருப்பினும், கடைவீதி, பேருந்துகளில் மக்கள் கூட்டம் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போன்ற நிலை, தற்போது திரும்பி விட்டது. இதனால் கொரோனாவின் தாக்கம் குறைந்து விட்டதாகவும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் கொரோனாவின் தாக்கத்தை குறைத்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்