திருமாவளவனை கைது செய்யக்கோரி தென்காசியில் பாஜ மகளிரணி ஆர்ப்பாட்டம் 160 பேர் ைகது

தென்காசி, அக். 28: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  பாஜ மகளிர் அணி மாவட்ட தலைமை மகாலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் ராம ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பாலகுருநாதன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், வக்கீல் திருமால் வடிவு, மகளிரணி காஞ்சனா மீனா, புரட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு ரங்கராஜ், பேச்சிமுத்து, பவுன்ராஜ், செந்தூர் பாண்டியன், ஓபிசி அணி ஜிம் ஜெய்சங்கர், குற்றாலம் திருமுருகன், தென்காசி நகர தலைவர் குத்தாலிங்கம், நகர பார்வையாளர் திருநாவுக்கரசு, தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், வடக்கு ஒன்றிய தலைவர் ஐயப்பன், மகேந்திரன், பாண்டியன், சிவக்குமார், கருப்பசாமி, சங்கர சுப்பிரமணியன், ராஜ்குமார், பிலவேந்திரன், சங்கரசட்டநாதன், அருணாச்சலம், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கடையநல்லூர் நகர தலைவர் மாரி, செயலாளர் வெங்கடேஷ், காளிராஜ் மற்றும்  23 பெண்கள் உட்பட 160 பேரை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Related Stories: