×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிவரை கடைகள் திறக்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை

செங்கல்பட்டு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நள்ளிரவு 12 மணிவரை கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 17ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சங்க கொடி ஏற்றி வைத்து, விழாவை துவங்கி வைத்தார். தொடர்ந்து, சங்கத்தில் புதியதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

பின்னர் விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்த வியாபாரிகளுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது, வியாபாரிகளின் நலன் கருதி ஜவுளிக்கடை, பட்டாசுகடை மற்றும் இனிப்பகம் ஆகியவற்றை நள்ளிரவு 12 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்றார். மதுராந்தகம்: மதுராந்தகம் அனைத்து வணிகர் சங்கங்களின் பொருளாளர் ஹீராலால் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் இறந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மதுராந்தகம் வணிகர் சங்க தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல்சமது, சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

Tags : Shops ,festival ,Deepavali ,Wickramarajah ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!