கமிஷன் மற்றும் வருமானம் நடிகை குஷ்புவை கண்டித்து ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி

திருச்சி, அக். 28: மனுஸ்மிருதி நூலில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக அம்சங்கள் இருப்பதாக கூறி தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதில் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாகவும், மனுஸ்மிருதியில் அதுபோன்ற எந்த வார்த்தையும் இல்லை என கூறி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் திருமாவளவனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் தடையை மீறி பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திருச்சியிலும் பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கிடையில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று ஜெயில்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அந்தோணி என்பவர், திருமாவளவனை விமர்சித்து பேசிய நடிகை குஷ்புவை கண்டித்தும், குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கூறி திடீரென தீக்குளிக்க முயன்றார். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய அந்தோணி, பற்ற வைக்க முயன்ற போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து உடலில் தண்ணீர் ஊற்றினர். இதுகுறித்து தகவலறிந்த காந்திமார்க்கெட் போலீசார் அந்தோணியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>