×

பண்ணைப்பள்ளி பயிற்சியில் ஆலோசனை திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் கமலாலய குளத்தில் படகு சவாரி துவங்க ேவண்டும்

திருவாரூர், அக்.28: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் உள்ளது.இக்கோயில் சைவ சமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வருகிறது. இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதே போல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆழி தேரோட்டத்திற்கு பின்னர் இந்த கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட இந்த குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி போக்குவரத்தானது முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் போது துவங்கப்பட்டது.

இதையடுத்து ஆயில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகு ஒன்றும், காலால் சுற்றி செல்லும் பெடலிங் படகு ஒன்றும் என 2 படகுகள் மூலம் நகரில் உள்ள பொது மக்கள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் இந்த குளத்தை சுற்றி பார்த்து வந்தனர். இதுமட்டுமின்றி குளத்தின் நடுவில் இருந்து வரும் நாகநாதர் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையிலும் இந்த படகு பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படகின் இன்ஜினில் ஏற்ப்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த 2 ஆண்டிற்கும் மேலாக இந்த படகு சவாரி இல்லாமல் இருந்து வருகிறது. இதேபோல் பெடலிங் படகு என்பதும் பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளதன் காரணமாக இந்த குளத்தில் படகு சவாரி என்பது தடைபட்டுள்ளது. எனவே குளத்தை சுற்றி பார்ப்பதற்கு இல்லாவிட்டாலும் பிரதோஷ நாட்களில் குளத்தின் நடுவில் உள்ள நாகநாதர் கோயிலுக்கு சென்று வரும் வகையிலாவது படகு இன்ஜினை சரிசெய்து படகு சவாரியை துவங்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ride ,Thiruvarur Thiyagarajaswamy Temple Kamalalaya Pool ,
× RELATED கோவையில் ஜாலி ரைடு சென்ற நிர்மலாவை...