×

உழவுப்பணி மும்முரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

தஞ்சை, அக். 28: தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 50 சதவீத காலி இடங்கள் பல்வேறு தொழிற்பிரிவுகள் உள்ளது. இதை நேரடி சேர்க்கை மூலமாக வரும் 31ம் தேதி வரை பயிற்சியாளர்கள் சேர்க்கப்படவுள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவரும் பயிற்சியில் சேரலாம். மகளிருக்கு கணினி பயிற்சி மற்றும் டெக்னிசியன் மெக்கட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுகள் உள்ளன. மகளிருக்கு வயது வரம்பு இல்லை.

8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ, கல்வி கட்டணம் செலுத்த ஏடிஎம் கார்டு ஆகியவற்றுடன் நேரில் வந்து உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் பல்வேறு தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களில் சேர்ந்து பயன்பெறலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயணச்சலுகை அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.500, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், பாடப்புத்தகங்கள், வரைப்பட கருவிகள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government Vocational Training Center ,
× RELATED தேனி, போடி அரசினர் ஐடிஐயில் 4.0 தொழில்...