×

காரைக்காலில் இறைச்சிக்காக வேட்டையாடிய பறவைகள் பறிமுதல் வனத்துறை நடவடிக்கை

காரைக்கால், அக்.28: காரைக்காலில் இறைச்சிக்காக, பல்வேறு இடங்களில் வேட்டையாடிய பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை மீண்டும் வனத்துறையினர் பறக்கவிட்டனர். குளிர்காலம் தொடங்கும்போது, பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும், கொக்கு, மடையான், செங்கால்நரை, கூழக்கடா போன்ற வெளிநாட்டு பறவைகள், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும்முன், காரைக்காலில் உள்ள நீர் நிலைகள், அலையாத்தி காடுகளில் தங்கி ஓய்வெடுத்து, இரை உண்டு செல்வது வழக்கம். இதுபோன்ற ஓய்வெடுக்க வரும் பறவைகளை மாவட்டத்தில் உள்ள சிலர் வலை வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் வேட்டையாடி வருகின்றனர். இதனை மாவட்ட வனத்துறை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் மீனவ கிராமங்கள், அரசலாறு உள்ளிட்ட பல்வேறு வயல்வெளி பகுதிகளில், கடந்த சில வாரமாக இறைச்சிக்காக பறவைகள் வேட்டையாடுவதாக வந்த தகவலின் பேரில், மாவட்ட வனத்துறை அதிகாரி கந்தமூர்த்தி தலைமையில் ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்றபோது, வலை, மற்றும் பிடித்த பறைவகளை வேட்டையாடுவோர் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். தப்பியோடிவர்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டாத வனத்துறையினர். அவர்கள் விட்டுச்சென்ற பறவைகளை, வலைகளை பறிமுதல் செய்து, பறவைகளை காரைக்கால் அலையாத்தி காடுகளில் மீண்டும் பறக்கவிட்டனர். மேலும், இது போன்ற வேட்டைகளை வேட்டையாடுவோர் கைவிடவேண்டும். மீறினால், ஜாமினில் வெளிவரமுடியாத கைது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Karaikal Forest Department ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது