புளியம்பட்டி அரசு பள்ளி அருகே குப்பைகள் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு

பொள்ளாச்சி, அக். 28: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள புளியம்பட்டி ஊராட்சியில் குடியிருப்புகள் அதிகளவு உள்ளன. குடியிருப்புகள் மற்றும் தெருவோரங்களில் உள்ள குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் கொட்டுவதை தவிர்த்து, கடந்த பல ஆண்டுகளாக ரோட்டோரம் கொட்டி வைப்பது இன்னும் தொடர்ந்துள்ளது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக பல்லடம் ரோட்டோரம் மட்டுமின்றி அங்குள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியை தொட்டுள்ள ரோட்டோரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்வோர் துர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர். மேலும் அதிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அந்த வழியாக செல்வோர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குப்பை கழிவுகளை கொட்டி தீ வைப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவான பகுதியில் இடம் தேர்வு செய்து அதில் குப்பைகளை கொட்டி அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: