ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

கோவை, அக். 28: கோவை அரசு கலைக்கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை மத்திய அரசு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி உத்தரவின் பேரில், கோவை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கோவை அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதில், முதுகலை சேர்க்கைக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்த்துறை பேராசிரியர்கள் ரவிக்குமார், ரங்கநாதன், புவியியல் துறை பேராசிரியர், நாட்டுநலப்பணித்திட்ட பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர். பின்னர், மாணவ, மாணவிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: