துளசி வியாபாரிகளிடம் முறைகேடாக சுங்கம் வசூல்

கோவை, அக். 28: கோவை பூ மார்க்கெட் பகுதியில் சாலையோரம் துளசி வியாபாரம் செய்யும் பெண்களிடமும், வியாபாரிகளிடம் முறைகேடாக சிலர் சுங்கம் வசூல் செய்வதாக சாலையோர வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்க தலைவர் மணி கூறியதாவது: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பூ மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் வியாபாரிகள் பல ஆண்டுகளாக துளசி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்களிடம் சிலர் முறைகேடாக எந்த வித ரசீதும் இல்லாமல் சுங்கம் வசூல் செய்கின்றனர். இதனை சாலையோர வியாபாரிகள் கேட்டால் அவர்களை வியாபாரம் செய்யவிடாமல் தடுக்கின்றனர். பல ஆண்டுகளாக இவ்வாறு சம்பந்தமே இல்லாமல் சுங்கம் வசூல் செய்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சாலையோர வியாபாரிகளிடம் இவ்வாறு முறைகேடாக வசூல் செய்வது நியாயமற்றது. ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரூ.250 வரை வசூல் செய்துள்ளனர். மற்ற நாட்களில் ரூ.40 வரை வசூல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: