×

கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், தங்களது தொழிலை தொடங்கும் வகையில், கடனுதவி வழங்கப்படும் என  செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார  மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம்,  தமிழகத்தில் பொருளாதரத்தில் பின்தங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு,  விராசாட் திட்டத்தின் மூலம் கைவினை பொருட்கள் செய்ய பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது.

கடனுதவி பெற விரும்புவோர், கிராமங்களில் வசிப்பவராக இருப்பின் ஆண்டு வருமானம்  98,000, நகர்புறமாக இருந்தால் 1.2 லட்சமாகவும் இருக்க  வேண்டும். இதன்மூலம், 10 லட்சம் வரை பெறலாம். கடன் தொகையை 5 ஆண்டுகளுக்குள் 5% வட்டியுடன் (ஆண்கள்), 4 % வட்டியுடன் (பெண்கள்)  செலுத்த வேண்டும். கடன் கோருபவர்கள், செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட தொடக்க  வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், நகர்ப்புற வங்கி, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகளி விண்ணப்பங்களை பெறலாம்.

Tags : Craftsmen ,
× RELATED போக்குவரத்து வசதி தொடங்காததால்...