×

வீட்டை உடைத்து கொள்ளை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த கீழ் ஒட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று  முன்தினம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற கார்த்திக், நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க  கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 20  சவரன் நகையை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.  மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : house ,
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை