×

வசதி படைத்தவர்களுக்கு மாடு கொட்டகை ஒதுக்கீடு

இடைப்பாடி, அக்.23:  இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் இடைப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் நங்கவள்ளி ஒன்றிய பகுதிகளில் மத்திய- மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து, சேலம் பார்த்திபன் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஆடு- மாடு கொட்டகை திட்டத்தில் வசதி படைத்தவர்கள் பயனடைந்து வருவதும், அந்த கொட்டகைகளில் கார்- டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார்சாலைகள் 20 நாட்களே ஆன நிலையில் மழையில் அடித்துச்செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், பார்த்திபன் எம்.பி. கூறியதாவது: இடைப்பாடி, நங்கவள்ளி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் ஆடு-மாடு கொட்டகை ஒதுக்கீட்டில் முறைகேடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுக்கான திட்டத்தை, வசதி படைத்தவர்கள் பயன்படுத்தி வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கொட்டகையில் கார்- டூவீலர்கள் என நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் தரமில்லாத தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தரம் இல்லாத சாலைகள் ஒருநாள் மழைக்கே சேதமடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, பிடிஓ சுஜாதா, திமுக ஒன்றிய செயலாளர்கள் இடைப்பாடி நல்லதம்பி, நங்கவள்ளி ரவிச்சந்திரன், கொங்கணாபுரம் பரமசிவம், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மாதேஸ்வரன், தாரமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், விக்டர், மருதுபாண்டி, திம்மம்பட்டி குமார், செம்மலை, அசோக் உடனிருந்தனர்.

Tags : Cow ,
× RELATED மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்